"ஓசியில வந்துகிட்டு ரூல்ஸ் பேசுறியா ?" - ஆவேசம் காட்டும் நடத்துநர்

0 6566

அரியலூரில் இலவச பேருந்து அனுமதிச் சீட்டுடன் அரசுப் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவிகளை கீழே இறங்குமாறு தரக்குறைவாகப் பேசி நடத்துநர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அரியலூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பேருந்துகளில் அரசின் இலவச பேருந்து அனுமதிச் சீட்டுடன் கல்லூரி மாணவிகள் பயணிப்பது வழக்கம்.

அவர்களை அரசுப் பேருந்து நடத்துநர்கள் சிலர், மரியாதை குறைவாக நடத்துவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அந்த வகையில் மாணவி ஒருவரை கீழே இறங்கச் சொல்லி வற்புறுத்தும் அரசுப் பேருந்து நடத்துநர் ஒருவர், பேருந்து கிளம்ப 5 நிமிடங்கள் உள்ள நிலையில் மட்டுமே ஏற வேண்டும் எனக் கூறுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments